கத்தரிக்காய் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்(பெரியதும் நீளமானதும்) - 2

மிளகாய்த்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையானளவு

மஞ்சள்தூள் - சிறிதளவு (விரும்பினால்)

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மரக்கறி வெட்டும் பலகையை எடுத்து அதன் மேல் ஒரு கத்தரிக்காயை வைத்து கத்தரிக்காயின் நீளபாட்டில் இரண்டாக வெட்டவும்.

அதன் பின்பு அதன் ஒரு பகுதியை எடுத்து அதன் குறுக்குப்பாட்டில் பெரிய துண்டுகளாக வெட்டவும் (அதில் 3 அல்லது 4 துண்டுகள் கிடைக்கும்).

வெட்டிய பின்பு அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து அதன் மேலே உள்ள சிறிய வெள்ளை அரை வட்ட பகுதியின் நடுவில்(1" - 2")ஆழத்திற்கு மட்டும் நேரா ககத்தியால் கீறி வெட்டவும் (கத்தரிக்காய் துண்டாகி விடகூடாது).

அதன் பின்பு கீறி வெட்டிய பகுதிக்கு குறுக்கால் 4 தடவைகள் கத்தியால்(1/2" - 1") ஆழத்திற்கு கீறி வெட்டவும் (கத்தரிக்காய் துண்டாகி விடகூடாது). இதனை போல எல்லா கத்தரிக்காய்களையும் வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுள் வெட்டிய கத்தரிக்காய்களை போட்டு கீறி வெட்டிய பகுதி துண்டாகி விடாமல் கழுவவும்.

பின்பு அதிலிருந்து கத்தரிக்காய்களை வெளியே எடுத்து அதிலுள்ள தண்ணீரை பிழிந்துவிட்டு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து அதற்கு மேல் மிளகாய்த்தூள் உப்பு, மஞ்சள்தூள்(விரும்பினால்) ஆகியவற்றை போட்டு அதனை நன்றாக பிரட்டி அதனை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதில் எண்ணெய் விட்டு அதனை நன்றாக கொதிக்கவிடவும் .

எண்ணெய் நன்றாக கொதித்ததும் கத்தரிக்காய்களை போட்டு முக்கால் பதம் வரும் வரை பொரிக்கவும்.

கத்தரிக்காய்கள் பொரிந்ததும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் காணப்படும் தேவையற்ற எண்ணெயை வடித்து விடவும்.

அதன் பின்பு சுவையான கத்தரிக்காய் பொரியல் தயாராகிவிடும். இதனை சோறு(சாதம்), இடியப்பம், பிட்டு, பாண் இவையாவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த கத்தரிக்காய் பொரியலை எல்லோரும் விரும்பி உண்பார்கள். இது சுவையானதும் கார்போஹைட்ரேட், மினரல், பாஸ்பரஸ், வைட்டமின், கால்சியம், அயோடின் ஆகிய சத்துகள் நிறைந்ததுமாகுமாகும். அத்துடன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் இதனை சிறுமிகள் சாமத்தியப்படும் போது தினமும் சாப்பிட கொடுப்பது வழக்கம். அத்துடன் இதனை எல்லோரும் சாப்பிடலாம். கவனிக்கப்பட வேண்டியது - இதனை வெட்டும் விதத்தையும் அத்துடன் இது பொரிந்தபின்பு ஒரளவு கோல்ட் வைலட்டாக காணப்படும் (வைலட்கத்தரிக்காயாக இருந்தால்) இல்லாவிட்டால் ஒரளவு கோல்ட் நிறமாக காணப்படும். விரும்பினால் கோல்ட் நிறமாக பொரிக்கலாம். மாற்று முறை - நல்லெண்ணெய்க்கு பதிலாக வேறு ஏதாவது(மரக்கறிஎண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ்எண்ணெய்)எண்ணெய் பாவிக்கலாம். விரும்பிய நிறம் அல்லது விரும்பிய வடிவ கத்தரிக்காய்களை பயன்படுத்தலாம். எச்சரிக்கை - இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.