கத்தரிக்காய் சம்பல்
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 2
பால் - கால் டம்ளர்
(தேங்காய்பாலெனில் முதற்பால், பசுப்பால் எனில் whole milk (சூடாக்கி விடவும்))
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
எலுமிச்சை - பாதி பழம்
வெங்காயம் - கால் டம்ளர்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கத்தரிக்காய்களை பாதியாக வெட்டி மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடி, அவியும் வரை அவிக்கவும்(7-10 நிமிடங்கள் எடுக்கும்). அடுப்புள்ளவர்கள் தணலில் சுட்டெடுக்கலாம்.
ஆறியதும் தோலை உரித்துவிட்டு, கத்தரிக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும். பச்சை மிளகாயின் விதையை நீக்கினால் நல்லது.
கத்திரிக்காயினுள் இதனைப் போட்டு கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின் உப்பு, பால், தேங்காய் பூ சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு கரண்டியால் ஒன்று சேர்க்கவும்.
குறிப்புகள்:
விரும்பினால் கறிவேப்பிலை மெல்லியதாக அரிந்து போடலாம். இது சோறுடன் தான் சேரும்.