கடலை மா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மா - ஒரு கப் மிளகு சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி தக்காளி - ஒன்று சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 6 பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி தாளிக்க : கடுகு

சோம்பு

கறிவேப்பிலை

வெந்தயம் - தேவையான அளவு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவில் மிளகு சீரகத் தூள்

உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் பிசையும் போது கையில் ஒட்டாது.

மாவை உருண்டைகளாக்கி தட்டி இடியாப்ப தட்டில் வைக்கவும்.

இடியாப்ப தட்டை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

வேக வைத்த மாவை எடுத்து ஆறியதும் சிறுத் துண்டுகளாக வெட்டவும்.

வெட்டிய துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம்

பூண்டு

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம்

பச்சை மிளகாயுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள்

தண்ணீர்

உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கடலை மாவு துண்டுகளை சேர்க்கவும்.

குழம்புடன் துண்டுகள் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

சுவையான கடலை மா குழம்பு ரெடி.

குறிப்புகள்: