கச்சான் அல்வா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி (sugar) - ஒரு கப்

வேர்க்கடலை (கச்சான் கடலை) - ஒரு கப்

ஏலம் (ஏலக்காய்) - சிறிது (நசுக்கியது)

செய்முறை:

சீனியை சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து கரையும் வரை சூடாக்கவும்.

அது கம்பி பதத்திற்கு வரும்முன் ஏலக்காயை போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

பின் கடலையை போட்டு நன்றாக கிளறவும்.

ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றவும்.

ஒரு நிமிடத்திற்குப் பின் சூட்டுடனே பிய்த்தெடுத்து உருண்டையாகவோ, தட்டியோ வைக்கலாம்.

ஆறியபின் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: