கச்சான் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கச்சான் (வறுத்து சுத்தம் செய்து பாதியாக்கிய) - 250கிராம்

சீனி(சர்க்கரை) - 250 கிராம்

அப்பச்சோடா - 2 சிட்டிகை

பட்டர் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)

செய்முறை:

ஒரு தட்டினை எடுத்து அதன் முழுப்பகுதிக்கும் நன்றாக பட்டரை பூசி வைக்கவும்.

பின்பு ஒரு உருளையை(பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி தட்ட பயன்படுத்துவது) எடுத்து அதன் மேல் முழுப் பகுதிக்கும் பட்டரை நன்றாக பூசிவைக்கவும்.

பட்டரை நன்றாக பூசிய பின்பு அடுப்பில் தாச்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும் .

தாச்சியை(வாணலியை)சூடானதும் அதில் சீனி (சர்க்கரையை)போட்டு அதனை கரண்டியால் இடை விடாது வறுத்து கொண்டிருக்கவும்.

சீனி(சர்க்கரை முழுவதும் இளகிபாகாகவரத்தொடங்கியதும் அதனுள் ஒரு மேசைக்கரண்டி பட்டர், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

எல்லாம் நன்றாக கலந்தபின்பு அதனுடன் வறுத்து கோது நீக்கி தோல் உரித்து இரண்டாக உடைத்து வைத்திருக்கும் (இரண்டாக பிளந்த வெள்ளை முத்து) கச்சானை(நிலக்கடலை,வேர்கடலை) கொஞ்சம் கொஞ்சமாக முழுவதையும் துவவும்.

கச்சான்(நிலக்கடலை, வேர்க்கடலை)முழுவதும் தூவி சேர்த்த பின்பு உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கியதை உடனடியாக பட்டர் பூசிய தட்டில் போட்டு அதனை பட்டர் பூசிய உருளையினால் நன்கு அழுத்தி பரப்பவும்.

அழுத்தி பரப்பியவுடன் உடனடியாக ஒரு கூரான கத்தியால் 1" தர 1" அளவான துண்டுகளாக அதன் மேல் நன்றாகவும் ஆழமாகவும் கீறவும்.

அதன் பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறிய பின்பு சுவையான சத்தான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)அல்வா தயாராகிவிடும்.

தயாரான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)அல்வா துண்டுகளை பிரித்தெடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கச்சான் (வேர்க்கடலை,நிலக்கடலை) அல்வா சுவையான கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற பலசத்துகள் உடைய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடியது ஆகும். எச்சரிக்கை - சர்க்கரைநோயாளர், கச்சான்(நிலக்கடலை, வேர்க்கடலை)அலர்ஜி உடையவர்கள், இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - அடுப்பில் தாச்சியை (வாணலியை வைத்து அதனை சூடாக்கி அதில் சிறிதளவு குருமணலை போட்டு நன்றாக சூடாக்கவும், மணல் சூடானதும் கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)போட்டு நன்றாக வறுக்கவும். அல்லது வறுத்த கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)கடையில் வாங்கவும், அதனை உடைத்து முத்துக்களை எடுக்கவும், பின்பு முத்துகளில் காணப்படும் சிகப்புதோலை அகற்றவும், பின்பு முத்துகளின் நடுவில் இரண்டாக பிளக்கவும். மாற்றுமுறை - கச்சான்(நிலக்கடலை)பதிலாகஉடைத்த பாசிபயரிலும்(பாசி பருப்பிலும்)செய்யலாம். பட்டருக்கு பதிலாக மாஜரின் அல்லது நெய் விட்டு செய்யலாம்.