கங்குன் கூனி பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கங்குன் - 2 கட்டு கூனிக் கருவாடு - ஒரு மேசைக்கரண்டி வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று மோர் மிளகாய் - 2 பூண்டு - 3 பல் கடுகு - கால் தேக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

கீரையை ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிய விடவும். நீர் வடிந்த பின் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இலைக் காம்புகள்

பிஞ்சுத் தண்டுகள் அனைத்தையும் சமையலில் சேர்க்கலாம். தண்டுகளைச் சிறிய துண்டுகளாக அரிந்து எடுக்கவும்.

பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.

கடாயில் அரைவாசி எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம்

பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் வெளிர்நிறமானதும் கீரை

பச்சை மிளகாய்

கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்

சிறிது உப்பு (இறுதியில் மோர்மிளகாய் சேர்க்கவிருப்பதால் இப்போது உப்பு தேவையான அளவை விட சற்றுக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.) சேர்த்துப் பிரட்டி மூடி வேக விடவும். இடைக்கிடையே சிறிது நீர் தெளித்துப் பிரட்டி விடவும்.

கீரை வெந்துகொண்டு இருக்கும் சமயம்

மற்றொரு அடுப்பில் மீதி எண்ணெயை விட்டு

கடுகு சீரகம் தாளிக்கவும்.

மோர் மிளகாயை கிள்ளிப் போட்டு

அது அரைப் பதமாகப் பொரிந்ததும் சுத்தம் செய்த கூனி

கறிவேப்பிலை சேர்த்துப் பொரிய விடவும்.

வெந்த கீரையில் தாளித்ததைக் கொட்டிப் பிரட்டி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

குறிப்புகள்: