ஓய்ஸ்டெர் சாஸ் சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
சோளமாவு (corn flour) - 2 மேசைக்கரண்டி
சோயாசாஸ் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
ஓய்ஸ்டெர் சாஸ்(oyster sauce) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
கிரேவி செய்ய:
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 4(இரண்டாக கீறி வைக்கவும்)
பூண்டு - 4 பல்
வெங்காய தாள்(spring onion) - 3
சின்ன வெங்காயம் - 4
ஆய்ஸ்டெர் சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து 2 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக்கவும். கோழியுடன் இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு, சோயாசாஸ், ஓய்ஸ்டெர் சாஸ், மிளகுத்தூள் கலந்து 20 நிமிடம் ஊறவிடவும்.
சூடான எண்ணெயில் கோழித்துண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், சதுரங்களாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஓய்ஸ்டெர் சாஸ் சேர்த்து வதக்கவும். பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து கிளறி 1 இன்ச் நீளத்தில் நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறவும்.
சோள மாவில் 1/4 தண்ணீர் கலந்து இதனோடு சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
சோயாசாஸ் ஓய்ஸ்டெர் சாஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை. கிரேவி செய்யும் போது அதிக தீயில் வைத்து செய்ய வேண்டும். அஜினமோட்டோ கோழி ஊறவைக்கும் போதும், க்ரேவிக்கு வதக்கும் போதும் ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் சுவை கூடும்.