ஒவன் பேக்ட் கேபேஜ் டம்பிள்ங்
தேவையான பொருட்கள்:
சின்ன கேபேஜ் - 1
வெங்காயம் - 1
உருளைகிழங்கு - 2
வெண்ணெய் - 1 தே.க
மிளகு தூள் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை:
கேபேஜ்ஜை நல்ல துருவியில் துருவவும்.
வெங்காயத்தையும் துருவியில் துருவவும்
துருவிய கேபேஜ்ஜை உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
தண்ணிர் இல்லாமல் நன்றாக வடியவிடவும்.
உருளை கிழங்கை வேகவைத்து மாஷரால் மசிக்கவும்.
வேகவத்தை கேபேஜ்+துருவிய கேபேஜ்+மசித்த உருளை கிழங்கு+வெண்ணெய்
உப்பு+மிளகு தூள் சேர்த்து நன்றாக பிசையவவும்.
இதை ஒவன் ப்ருப்ஃ பாத்திரத்தில் ஆயில் ஸ்ப்ரே செய்து
இந்த கலவையை போட்டு வைக்கவும். மேலே மீண்டும்
கொஞ்சம் பட்டரை போட்டு ஒவனின் முற்சூடு 350 டிகிரி 25 நிமிடங்கள்
வைத்து அதில் இதை வைக்கவும் இடையிடேயே பார்க்கவும்.
நல்ல லைட் கோல்டன் ப்ரவுன் கலரானவுடன் இதை
வெளியில் எடுக்கவும்.
இது நல்ல கிரிஸ்பி+க்ரன்ஞியாக சாப்பிட நன்றாக இருக்கும்.
என் ரஷ்யன் தோழியின் வீட்டில் சாப்பிட்டது+கற்றுகொன்டது.
குறிப்புகள்:
ஒவனின் வெட்பத்தை பொறுத்து கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.