எள்ளுப்பாகு
தேவையான பொருட்கள்:
எள்ளு (துப்பரவாக்கியது) - 250 கிராம்
சீனி (இடித்து அரித்தது) - 150 கிராம் (2 மேசைக்கரண்டி)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி (மட்டமாக)
செய்முறை:
அடுப்பில் தாட்சியை வைத்து அதை சூடாக்கவும். அதில் எள்ளை போட்டு மெல்லிய பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
பின்பு எள்ளை உரலில் இட்டு சீனியும் சேர்த்து மென்மையாக (பசுந்தையாக) இடிக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து அதை சூடாக்கி அதில் நெய்யை விட்டு சூடாக்கவும்.
சூடான நெய்யை இடித்த கலவையில் ஊற்றி ஏலக்காய்த்தூளும் சேர்த்து இடித்து ஓரளவு (விரும்பியளவு) பெரிய உருண்டைகளாக பிடிக்கவும். அதன் பின்பு இதை பரிமாறவும்.
குறிப்புகள்:
எள்ளுப்பாகு இலங்கை மக்களிடையே மிகவும் பிரபல்யமான ஓர் உணவு வகையாகும். இதை இலங்கையில் பெரியபிள்ளையான(வயதிற்குவந்த (ருதுவான))குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஓர் உணவு, அத்துடன் இதை நெஞ்சுதிடமாக(தையரியமாக) இருப்பதற்கும் கொடுப்பார்கள்.