எலுமிச்சைப்பழ ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலுமிச்சைப்பழம் - 20 காய்ந்த மிளகாய் - 15 - 20 வெந்தயம் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் 10 எலுமிச்சைப் பழத்தை எடுத்து நன்றாக கழுவி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

எலுமிச்சைப்பழத்தை 4 துண்டுகளாக மேலிருந்து கீழாக 3/4 பாகம் வரை கத்தியால் வெட்டவும்.

முதலில் ஒரு பாதியை விரித்து உப்பை வைக்கவும். பின்பு மறு பாதியை விரித்து உப்பை வைக்கவும். அப்படியே முழுவதையும் செய்யவும்.

ஒரு ஜாடியில் அல்லது கண்ணாடி பாட்டிலில் எலுமிச்சை பழங்களை வைத்து ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும்.

மறு நாள் எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைத்து வெயிலில் உலர வைக்கவும். ஜாடியையும் வெயிலில் வைக்கவும். மாலையில் சிறிதளவு உலர்ந்திருக்கும். அதை எடுத்து மீண்டும் ஜாடியில் வைத்து மூடி விடவும். அடுத்த நாள் காலையில் மீண்டும் உலர வைக்கவும். மீண்டும் மாலையில் ஜாடியில் எடுத்து வைத்து விடவும்.

இதைப் போலவே 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் எலுமிச்சை பழங்களை வைத்து நன்கு உலர விடவும்.

வாணலியில் காய்ந்த மிளகாய்

வெந்தயம்

பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.

மீதமுள்ள 10 எலுமிச்சைப்பழத்தில் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைப்பழச்சாற்றில் வறுத்து பொடி செய்த தூள்

மஞ்சள் தூள்

சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பிறகு இந்த சாறை உலர்ந்த எலுமிச்சைப்பழத்தில் மேல் ஊற்றி கலந்து விடவும். இதனை 2 நாட்கள் மூடி அப்படியே வைக்கவும். இடையிடையே மரக்கரண்டியால் பிரட்டி விடவும்.

சுவையான எலுமிச்சைப்பழ ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை தேவையானப்பொழுது எடுத்து சோறு

புட்டுடன் பக்க உணவுவாக வைத்து சாப்பிடலாம். இந்த ஊறுகாய் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: