உழுத்தம் பிட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உழுத்தம் மா - 1/4 கப்

சிவப்பு அரிசிமா - 1 கப்

உப்பு

தேங்காய்ப்பூ - 1/4 கப்

இனிப்பு புட்டு:

சர்க்கரை (வெல்லம்) - 5 மேசைக்கரண்டி

கார புட்டு:

வெங்காயம் - 1

கத்தரிக்காய் - 1

நல்லெண்ணெய் - 3 - 4 மேசைக்கரண்டி

உப்பு

மிளகாய்த்தூள் - 1/2 - 1 தேக்கரண்டி

செய்முறை:

மா வகைகளை ஒன்றாக கலந்து உப்புடன் கலக்கவும்.

பின்னர் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

மாவுக்கலவை கட்டிகளும் மாவுமாக உதிரியாக இருக்கும்பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு தட்டில் கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.

பின்னர் இதனுடன் தேங்காய்ப்பூவை கலந்து ஆவியில் அவித்து எடுக்கவும்.

இனிப்பு புட்டு:

சர்க்கரையை (வெல்லம்) துருவிக் கொள்ளவும்.

இதை அவித்த பிட்டுடன் (சூடாக இருக்கும் போதே) சேர்த்து கிளறவும். - பிட்டு சூடாக இருக்கும் பொதே சர்க்கரையை சேர்த்தால்தான் பிட்டின் சூட்டில் சர்க்கரை இளகி பிட்டுடன் சேரும்.

கார புட்டு:

கத்தரிக்காய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய் தூள் போட்டு பிரட்டவும்.

நல்லெண்ணெயை சூடாக்கி அதனுள் கத்தரி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின்னர் அதனுள் அவித்த பிட்டைப் போட்டு கிளறி இறக்கவும்.

சுவையான பிட்டுகள் தயார். இவற்றை சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்கு வறுத்த அரிசிமாதன் பயன்படுத்த வேண்டும். விரும்பினால் கத்தரிக்காயுடன் கடுகு, பெரிய சீரகம் (சோம்பு) சேர்த்தும் வதக்கலாம்.

1 அல்லது 1 1/2 கப் தேங்காய்ப்பால் அல்லது பசும்பாலை சர்க்கரை/சீனி போட்டு காய்ச்சி அதனுள் அவித்த பிட்டை போட்டு கிளறியும் செய்யலாம். வித்தியாசமான சுவையாக இருக்கும்.