உள்ளி பிரெட் (Garlic Bread)
0
தேவையான பொருட்கள்:
உள்ளி - 3 பல்லு
பார்ஸ்லி இலை
பட்டர் - 2 மேசைக்கரண்டி
பிரென்ச் பிரெட் - 1
உப்பு
செய்முறை:
உள்ளியை இரண்டு நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு எடுத்து பேஸ்ட் ஆக்கவும்.
பார்ஸ்லியை தூளாக அரிந்து 2 மேசைக்கரண்டி எடுக்கவும்.
பின்னர் பட்டர், பார்ஸ்லி இலை, உள்ளி பேஸ்ட், உப்பு என்பவற்றை ஒன்றாக கலக்கவும்.
பிரெட்டை நீளவாக்கில் பாதியாக வெட்டி அதன் இரு பக்கமும் உள்ளி கலவையை சீராக பூசவும்.
பின்னர் இரு துண்டுகளையும் மூடி 350 Fஇல் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான உள்ளி பிரெட் தயார். இதனை துண்டுகளாக்கி விரும்பிய பக்க உணவுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு soft butter உபயோகித்தால் பூசுவதற்கு இலகுவாக இருக்கும். பிரெஷ் பார்ஸ்லி இலைக்கு பதில் dried இலையும் பாவிக்கலாம்.