உருளைக்கிழங்கு க்ராடின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 பெரியது பால் - அரை லிட்டர் ஃப்ரெஷ் க்ரீம் - 3 தேக்கரண்டி வெங்காயம் - பாதி பூண்டு தூள் (அ) பேஸ்ட் - அரை தேக்கரண்டி மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி சீஸ் மற்றும் வேக வைத்த கோழி (அ) இறைச்சி (விரும்பினால்)

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தோல் சீவிய உருளைக்கிழங்கை படத்தில் உள்ளவாறு மெல்லியதாகவும் இல்லாமல்

தடிமனாகவும் இல்லாமல் வட்டமாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீமை போட்டு அதனுடன் பால் சேர்க்கவும்.

அதனுடன் மிளகுத் தூள்

பூண்டு தூள்

உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

கொதி வரும்போது வெட்டி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

பிறகு பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வப்போது மூடியை திறந்து கிளறிவிடவும். இல்லையெனில் அடிபிடித்துவிடும்.

கிழங்கு வெந்து

கலவை சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி

அவன் ட்ரேயில் ஊற்றி பரப்பிவிடவும். மேலே வெங்காயத்தை நறுக்கி தூவவும். விரும்பினால் இறைச்சி அல்லது கோழி சேர்க்கலாம். வெஜிடேரியன்களாக இருந்தால் நறுக்கிய காரட் சேர்க்கலாம்.

இதை அவனில் வைத்து 180° சூட்டில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலே இப்படி பொன்னிறமாக இருக்கும் போது அவனிலிருந்து எடுக்கவும்.

காரம்

எண்ணெய்

மசாலா இல்லாத குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு க்ராடின் (Potato Gratin) தயார். விரும்பினால் மேலே க்ரேடட் சீஸ் தூவலாம். இது ஒரு ஃப்ரெஞ்ச் உணவு.

குறிப்புகள்: