உருளைக்கிழங்கு கட்லெட் துண்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு (மசித்த) - 2 கப்

பாண் - 2 துண்டு

தேசிக்காய் சாறு - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு, பாண், தேசிக்காய்சாறு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் பிசைந்து (குழைத்து)சிறு சிறு துண்டுகளாக்கி தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் துண்டுகளை போட்டு ரோஸ்ட் போல செய்யவேண்டும்.

குறிப்புகள்:

இது கார்போஹைட்ரேட் நிறைந்த ஒர் உணவு. (1) இதை செய்தவுடன் சுட சுட சாப்பிட்டால் இதன் சுவையே தனி.(2)இதை பன்னின் (பணிஸ்) உள்ளே வைத்துச் சாப்பிடலாம். (3)இதை சர்க்கரை நோயாளர் மாரடைப்பு (இருதய) நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம்.