உம்ம் அலி (1)
தேவையான பொருட்கள்:
ஃபுரோசென் பஃப் பேஸ்ட்ரி (ஷீட்ஸ்) - 10
பசும்பால் - 2 கப்
சர்க்கரை - அரை கப்
கன்டென்ஸ்ட் மில்க் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய நட்ஸ் (ஆல்மன்ட், பிஸ்தா) - 5 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் (இல்லையென்றால் தவிர்க்கலாம்) - 2 சொட்டு
செய்முறை:
பஃப் பேஸ்ட்ரியை அவனில் பரப்பி வைத்து 20 லிருந்து 30 நிமிடம் அவனில் சூட்டைப் பொறுத்து நல்ல மொறுமொறுவென பேக் செய்து கொள்ளவும். பிறகு அதனை சின்ன சின்னதாக பிச்சு பிச்சு வைக்கவும்.
பாலை கொதிக்க வைத்து, சர்க்கரை, வெண்ணெய் சேர்க்கவும். தீயை அணைத்து விட்டு கன்டென்ஸ்ட் மில்க், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
ஒரு அலுமினியம் டிஸ்போஸபில் கன்டெயினரில் பஃப் பேஸ்ட்ரியை நிரப்பி அதில் பாதி அளவு பால் சேர்த்து நட்ஸ் தூவி பேஸ்ட்ரியை பாலில் முழுக்கும்படி அமுக்கி அவனில் மேலும் ஒரு 10 நிமிடம் மேல் பாகம் சிவக்கும்படி வைக்கவும். இதனை சூடாகப் பரிமாறவும்.
இரண்டாவது முறை அவனில் வைப்பது பார்க்க ஒரு ஃபைனல் ஃபினிஷிங்காக மட்டும் தான். தேவையில்லையென்றால் அதனை தவிர்த்து அப்படியே சூடாக பரிமாறவும். இனிப்பை தேவைக்கு கூட்டி/குறைத்துக் கொள்ளவும். குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர்.
குறிப்புகள்:
மொத்த பேஸ்ட்ரியையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி உம்ம் அலி செய்யாமல் ஒரு ஆளுக்கான அளவை மட்டும் ஒரு கன்டெயினரில் செய்து 4,5 கன்டெயினர்களாக அவனில் வைத்து அப்படியே பரிமாறவும்.