உடனடி வறுத்த உளுத்தம்மா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைமா (மைதாமா) - (2-3) கப்

உளுத்தம்மா (வறுத்தது) - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

பட்டர் - ஒரு மேசைகரண்டி

பால் - சிறிதளவு

முட்டை - ஒன்று

கறிவேப்பிலை (சிறிதாகவெட்டியது) - சிறிதளவு

பச்சைமிளகாய் (சிறிதாகவெட்டியது) - 2

எண்ணெய் - சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மா (மைதாமா), உளுத்தம்மா, உப்பு, பட்டர் பால், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு (தோசைமாபதம்) கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும். அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய் தடவவும்.

பின்பு அதில் மாவை ஊற்றி பரத்திவிடவும் (ஒரளவு மெல்லிய தோசைகளாக)

தோசை வெந்தவுடன் தோசையை திருப்பிவிடவும்.

அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும். இந்த தோசைக்கு, சட்னி, உருளைக்கிழங்கு பிரட்டல் கறி நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

உடனடி வறுத்த உளுத்தம்மா தோசை மிக விரைவில் செய்யகூடியதும் கார்போஹைட்ரேட், மினரல், உயிர்சத்துகள், கால்சியம் நிறைந்ததும், குழந்தைகள் விரும்பி உண்ண கூடியதுமான ஒர் சிற்றுண்டி உடனடி வறுத்த உளுத்தம் மா தோசை ஆகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் கோதுமைமா, உளுத்தம் மா, உப்பு,பட்டர், பால், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு தோசைமாவு பதம் கட்டியில்லாமல் நன்கு கரைக்கவும். எச்சரிக்கை - உளுந்து அலர்ஜி உள்ளவர்கள், இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.