ஈரப்பலாக்காய் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஈரப்பலாக்காய் -1

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -1

தேங்காய்ப் பால் – ¼ கப்

பூண்டு- 5-6 பற்கள்

இஞ்சி – 1 துண்டு

சீரகம் 1 தே.கரண்டி

மிளகுதூள்-1/2 தே.கரண்டி

மிளகாய்த்தூள் -2 தே.கரண்டி

புளி-சிறிதளவு

கடுகு- சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 தே.கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பலாக்காயைப் நான்காகப் பிளந்து தோல் சீவி நடுத்தண்டுப்பகுதியை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

அத்துண்டுகளை தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்கவும்.

வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெங்காயம், மிளகாய்,பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின் தட்டி வைத்த இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

நன்கு கொதித்து இறுகிவர, மிளகுதூள் தூவி, மிகுதிப் பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

சுவையான ஈரப்பலாக்காய்கறி தயார். இதை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: