இலங்கை உளுந்து வடை
தேவையான பொருட்கள்:
உளுந்து - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு) விடவும். (உளுந்தினை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேன்டும்). அதன் பின்பு அதை (கால் -அரை) மணி நேரம் ஊறவிடவும்.
(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).
பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும். (சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது). அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி ஆகியவற்றை கலக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக கொதிக்கவிடவும்.
அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.
கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும். இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.
பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).
அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்.
பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இலங்கையில் மிகபிரபல்யமான, பாரம்பரிய, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான சிற்றுண்டியே இலங்கை உளுந்து வடை ஆகும். எச்சரிக்கை - உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - கருப்பு உளுந்துக்கு பதிலாக வெள்ளை உளுந்திலும் செய்யலாம், கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம். உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம். விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால் தேக்கரண்டி சேர்க்கலாம். வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம் அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில் வைத்து சூடாக்கி உண்ணலாம் . கவனிக்க வேண்டிய விஷயங்கள் - வடை நன்றாக அவிந்ததா என்பதை கவனிக்கவும். வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும் (கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால் வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி வடையை பழுதாக்கிவிடும்.