இத்தாலியன் பாஸ்தா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

Bow tie வடிவத்திலான பாஸ்தா - மூன்று கோப்பை

பெரிய தக்காளி - நான்கு

டின் தக்காளி சாஸ்/puree - அரைக்கோப்பை

எண்ணெயில் ஊறிய தக்காளிவத்தல் - கால் கோப்பை

வெங்காயம் - ஒன்று

பூண்டு - நான்கு பற்கள்

சர்க்கரை - அரை தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

சில்லி ஃபிளேக்ஸ் - கால் தேக்கரண்டி

பேசில் தழை - பத்து எண்ணிக்கைகள்

துருவிய பார்மசான் சீஸ் - கால்கோப்பை

ஆலிவ் ஆயில் - கால் கோப்பை

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.

தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து, அதன் தோலை உரித்து நசுக்கி கூழாக்கவும்.

ஒரு வாயகன்ற சட்டியைக் காயவைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து தக்காளி வத்தலைப் போட்டு வதக்கவும்.

பிறகு கூழாக்கிய தக்காளியை ஊற்றவும். அதை தொடர்ந்து தக்காளி சாஸை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கெட்டியாக ஆனவுடன் உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் கால்கோப்பை தண்ணீரைச் சேர்த்து கலக்கி அடுப்பின் அனலை சிம்மில் வைக்கவும்.

இதற்கிடையில் மற்றொரு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை உப்புச்சேர்த்து கொதிக்க விடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பொதியிலுள்ள விதிமுறைகளின் படி வேகவைக்கவும்.

பின்பு சிம்மில் உள்ள தக்காளி சாஸில், பொடியாக நறுக்கிய பேஸில் இலையைத்தூவி கலக்கி விட்டு, வெந்துக்கொண்டிருக்கும் பாஸ்தாவை ஜல்லடைக் கரண்டியால் அரித்தெடுத்து உடனே சாஸில் கொட்டி கலக்கவும்.

இவ்வாறு சாஸில் கலக்கிய சுவையான பாஸ்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: