இடியாப்ப கொத்து
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 10
உருளைக்கிழங்கு - 3 சிறியது
தக்காளி - 2 சிறியது
நறுக்கிய கோஸ்,கரட் கலவை - 1 கப்
ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப்
அவித்த கடலை - 1 கப்
நீளமாக வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
நீளமாக வெட்டிய உள்ளி - 1/2 கப்
நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 3
குறுணலாக வெடிய இஞ்சி - 1 தேக்கரண்டி
கராம்பு - 4
ஏலம் - 3
கறுவா - 2" துண்டு
கஜு - 20 கிராம்
ரெய்சின் (Raisin) - 15 கிராம்
கடுகு - சிறிது
பெரிய சீரகம் - சிறிது
வெந்தயம் - சிறிது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை:
இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கு, தக்காளி, ஊறவைத்த சோயாமீற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்.
கராம்பு, ஏலம், கறுவா என்பவற்றை வறுத்து பொடியாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெரிய சீரகம், நீளமாக வெட்டிய வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், உருளை, சோயாமீற் என்பவற்றை போட்டு வதக்கவும். பின் அவித்த கடலை, நறுக்கிய கோஸ்,கரட் கலவையை சேர்த்து வதக்கவும்.
கலவை ஓரளவு வதங்கியதும் 1 கப் நீர் விட்டு மூடி அவிய விடவும்.
பின்னர் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் அவிய விடவும்.
கலவை நன்கு அவிந்து ஓரளவு நீர் வற்றியதும் குறுணலாக வெடிய இஞ்சி, வெந்தயம் சேர்த்து கிளறவும்.
கலவை நன்கு நீர் வற்றி சுருண்டதும் பொடியாக்கிய ஏல கலவையை போட்டு கிளறி மூடி 2 நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் வைக்கவும்.
பின்னர் உதிர்த்த இடியாப்பத்தைக் கொட்டி கறியுடன் சேரும்வரை நன்கு கிளறவும்.
இடியாப்ப கொத்து தயார். இதனை பரிமாறும் தட்டில் கொட்டி பரவி பட்டரில் வறுத்த கஜு, ரெய்சின் மற்றும் கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.