இஞ்சி பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைமா - 150 கிராம்

அரிசிமா - 25 கிராம்

இஞ்சி - 50 கிராம்

பச்சைமிளகாய் - 50 கிராம்

டால்டா - 25 கிராம்

ஆப்பசோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையானளவு

உப்பு - தேவையானளவு

கறிவேப்பிலை - தேவையானளவு

பெருஞ்சீரகம்(சோம்பு) - அரை தேக்கரண்டி

தண்ணீர் - தேவையானளவு

செய்முறை:

பாத்திரத்தில் இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக இடித்து வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா, ஆப்பசோடா, உப்பு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம்(சோம்பு), டால்டா, தண்ணீர், இடித்த(பச்சைமிளகாய், இஞ்சி) கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும்.

அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கெட்டியாக பிசைந்து வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு பொரிய விடவும்.

உருண்டைகள் நன்கு பொரிந்ததும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

நீங்கள் சாப்பிட்ட உணவுகளை மிகவும் எளிதில் ஜீரணமாக்கும். அத்துடன் சுவையானதும், சத்துகள் நிறைந்ததுமான ஓர் சிற்றுண்டியே இஞ்சி பக்கோடா ஆகும். மாற்று முறை - டால்டாவிற்கு பதிலாக பட்டர் அல்லது மாஜரீன்(மாகரின்) பாவிக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக இடித்து வைக்கவும். அரிசிமா, கடலைமா, ஆப்பசோடா, உப்பு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம்(சோம்பு), டால்டா, தண்ணீர், இடித்த(பச்சைமிளகாய்,இஞ்சி) கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும்.