இக்கான் பக்கார் 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாறை மீன் அல்லது வவ்வா மீன் - 5 (medium size)

வெண்ணெய் அல்லது எண்ணெய்- சிறிதளவு

மசாலா அரைக்க:

சின்ன வெங்காயம்- 10

பூண்டு- 10 பல்

இஞ்சி- 2இன்ச் துண்டு

லெங்குவாஸ் (சித்தரத்தை)- 3 இன்ச் துண்டு

கேண்டில் நட் அல்லது முந்திரி பருப்பு- 5

ஃப்ரெஷ் மஞ்சள்- 1இஞ்ச் துண்டு (அல்லது மஞ்சள் தூள்)

சர்க்கரை(சீனி)- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

டிப்பிங் சாஸ் செய்ய:

பச்சை தக்காளி (தக்காளி காய்)- 2

பழுத்த மிளகாய்- 10

பச்சை மிளகாய்- 10

சின்ன வெங்காயம்- 5

பூண்டு- 5பல்

சர்க்கரை(சீனி)- 1/2தேக்கரண்டி

ஸ்வீட் சோயா சாஸ்- 1மேசைக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மீனின் வயிற்றுப்பகுதி மற்றும் தலையில் உள்ள கழிவுகளை நீக்கி

சுத்தமாக்கவும் (தலையை தனியே வெட்ட வேண்டாம். முழு மீனாக இருக்க வேண்டும்)

சுத்தம் செய்த மீனை பட்டர் ஃப்ளை கட் செய்யவும். அல்லது கத்தியால் மூன்று அல்லது நான்கு கீறல்கள் இரு புறமும் போடவும்.

அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து மசாலாவை மீனில் நன்றாக பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 2மணிநேரம் ஊறவிடவும். (இரவு பார்பிக்யூ செய்வதாக இருந்தால் காலையிலேயே மசாலா பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் மீன் மசாலாவில் நன்றாக ஊறியிருக்கும்)

பார்பிக்யூ க்ரில்லில் மீனை இருபுறமும் நன்றாக சுட்டெடுக்கவும். பார்பிக்யூவில் சுடும் போது லேசாக வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும்.

டிப்பிங் சாஸ் செய்ய:

தக்காளி காய், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் அணைத்து ஆறியதும் சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் ஸ்வீட் சோயா சாஸ் சேர்த்து கலந்தால் டிப்பிங் சாஸ் தயார்.

பார்பிக்யூ செய்த மீனை டிப்பிங் சாசுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

மீனில் காரம் இருக்காது. டிப்பிங் சாஸ் காரமாக இருப்பதால் இதில் மீனை தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.