ஆஸ்பரகஸ் சாலட் Asparagus salad

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆஸ்பரகஸ் - அரைக்கிலோ

தக்காளி - இரண்டு

சிவப்பு வெங்காயம் சிறியதாக - ஒன்று

பூண்டு - இரண்டு

வெங்காயத்தாள் - இரண்டு

ஆலிவ் பழம் - அரைக்கோப்பை

பிரவுன் சுகர் - இரண்டு தேக்கரண்டி

வினிகர் - ஒரு மேசைக்கரண்டி

பெப்ரிக்கா - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி

உப்புத்தூள் - அரைத்தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

ஆஸ்பரகஸ்ஸின் முற்றியப் பகுதியை உடைத்து நீக்கிவிட்டு இளசாக இருப்பதை மட்டும் ஸ்டீமரில் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு அரை வேக்காடாக வேகவைத்து நன்கு ஆறவைத்துக் கொள்ளவும்.

பிறகு அரவை இயந்திரத்தில் தக்காளி, வெங்காயம், பூண்டு, சர்க்கரை, வினிகர், கொத்தமல்லி, உப்பு, மிளகு, பெப்ரிக்கா மற்றும் ஆலிவ் எண்ணெயை ஊற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பரிமாறும் தட்டில் ஆறவைத்த காயை பரவலாக போட்டு அதன் மீது அரைத்த விழுதை ஊற்றவும்.

பிறகு நறுக்கிய ஆலிவ் பழங்களையும், வெங்காயத்தாளையும் பரவலாகப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இந்த சுவையான சாலட்டை பக்க உணவாக பரிமாறலாம்.

குறிப்புகள்: