ஆரஞ்சு சால்மன் ஃபில்லட்ஸ்
தேவையான பொருட்கள்:
சால்மன் மீன் ஃபில்லட்ஸ் - நான்கு துண்டுகள்
ஆரஞ்சு சாறு - கால் கோப்பை
எலுமிச்சைச்சாறு - இரண்டுதேக்கரண்டி
முட்டை - இரண்டு
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
ஹாட் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
பிரெட் கிரம்ஸ் - அரைகோப்பை
பார்ஸ்லி தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் ஆரஞ்சுசாறு, சில்லி சாஸ், சோயா சாஸையும் ஊற்றி நன்கு அடித்து வைக்கவும்.
சால்மன் துண்டுகளை சுத்தம் செய்து நீர் இல்லாமல் துடைத்தெடுத்து தயாரித்துள்ள முட்டைக் கலவையில் போட்டு பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு தட்டில் ரொட்டித்தூளுடன், உப்பு, மிளகுத்தூள், பார்ஸ்லி தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
பின்பு அதில் ஊறியுள்ள மீன் துண்டுகளை போட்டு எல்லாப்பக்கமும் படும்படியாக பிரட்டி எடுத்து பேக்கிங் செய்யும் தட்டில் வைக்கவும்.
பிறகு எண்ணெயில் எலுமிச்சைச்சாற்றை கலந்து மீன் துண்டுகளின் மீது பரவலாக ஊற்றவும்.
பின்பு ஏற்கெனவே 400 டிகிரி வெப்பத்தில் சூடாக்கப்பட்ட அவனில் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்கு பேக் செய்து மீன் வெந்ததை உறுதி செய்து வெளியில் எடுத்து விடவும்.