ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் (தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டவும்) - ஒன்று

ஸ்ட்ராபெர்ரி - அரை கப்

ஐஸ் கட்டி - ஒரு கப்

பால் - 2 கப்

சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி

வெனிலா - ஒரு துளி

கஜு(கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு) - 4

பிளம்ஸ் - 5

தண்ணீர் - அரை கப்

செய்முறை:

ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, தண்ணீர் ஆகியவற்றை நன்றாக மிக்ஸியில் (கிரைண்டரில்) கலக்க அடிக்கவும்.

அதன் பின் பால், சீனி (சர்க்கரை), வெனிலா, கஜு (கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு), பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும்.

பின்னர் ஐஸ் கட்டி சேர்த்து அடிக்கவும். இதனை ஜூஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும் .

குறிப்புகள்:

இதை தினமும் குடித்தால் உங்கள் சருமம் பளபள என்று மின்னும். ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும் போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள் வீணாகாது. (1)(ஆப்பிள், (2)விரும்பினால் சீனி,வெனிலா, கஜு(முந்திரிப்பருப்பு),பிளம்ஸ் சேர்க்கலாம். ஆனால் சீனி, வெனிலா, கஜு, பிளம்ஸ் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். (3)பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்க்கலாம். (4)சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்