ஆப்சலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - 2 கப்

எலுமிச்சைப்பழம் - ஒன்று

வெங்காயம் - பாதி பாகம்

பச்சை மிளகாய் - ஒன்று

மல்லிக்கீரை - 2 கொத்து

உப்பு - அரை ஸ்பூன்

செய்முறை:

தேங்காய்ப்பாலை திக்காக ஒரு கப்பும், தண்ணீர் கலந்ததாக ஒரு கப்பும் எடுத்து உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய், மல்லிக்கீரையை நைசாக நறுக்கி அதில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து, லேசாக பிசைந்துவிட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்து, அதனுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

இது வெள்ளை சோற்றுக்கு ரசம் போன்று ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்புகள்:

இதற்கு கறிவகைகளை காரமாக வைத்துக்கொள்ளவேண்டும். புளிப்பு, காரம் அதிகப்படுத்தவேண்டுமானால், எலுமிச்சை, பச்சை மிளகாயை கூட்டிக் கொள்ளலாம். இது இஸ்லாமிய இல்லங்களில் குழம்பு, ரசத்திற்கு பதிலாக பயன்படுத்துவது.