ஆப்கானி ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி உப்பு - சிறிதளவு பால் - அரை டம்ளர் எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக வைக்கவும்.

ஈஸ்ட்டை அரை டம்ளர் வெதுவெதுப்பான பாலில் போட்டு ஐந்து நிமிடம் ஊற விட்டு அதை மாவில் போட்டு உப்பு சேர்த்து சப்பாத்திமாவு பதத்துக்கு பிசைந்து கடைசியில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இந்தமாவு இரண்டு பங்காக வருவதற்கு மூன்றுமணிநேரம் ஆகும்.

அடுத்து அவனில் ஒரு மண் சட்டியை கவுத்து வைத்து அவனை ஃபுல் டெம்ப்ரேச்சரில் வைத்து அரைமணி நேரம் சட்டியை சூடுப்படுத்தவும்.

மாவை சப்பாத்தி போல் இட்டுக் கொள்ளவும்..

அதை அவனில் உள்ள சட்டியில் இதுபோல் மேலே போடவும் போட்டதும் ரொட்டி நன்கு உப்பி வரும் (திருப்பி போடவேண்டாம் அவன் சூட்டில் வெந்துவிடும்) இப்படியே சுட்டு எடுக்கவும்..

சுவையான ஆப்கானி அவன் ரொட்டி தயார். தொட்டுக் கொள்ள காய்கறி குருமா கோழி குழம்பு நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: