ஆத்ஸ் சோர்பா (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளைக்கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரைப்பழம் சிறியது
செய்முறை:
கேரட், தக்காளி, உருளைக்கிழங்கையை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், உப்பு தூள், பூண்டையையும் பொடியாக நறுக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.
வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்
குறிப்புகள்:
இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாதத்திலிருந்து இதை கொடுக்கலாம்.
சில குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெறுத்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாப்பிடுவார்கள்.