அவகோடா டிப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

உள்ளி (பூண்டு) - ஒரு பல்

அவகோடா - ஒன்று

கொத்தமல்லி தழை - 2 இணுக்கு

உப்பு - 2 சிட்டிகை

எலுமிச்சைப்பழம் - அரை பாதி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, உள்ளி (பூண்டு), மிளகாய் ஆகியவறை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் உள் இருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

நறுக்கிவைத்தவற்றை அதனுடன் போட்டு நன்கு கலக்கி உப்பு, எலுமிச்சை ஜுஸ் ஊற்றி சிப்ஸ் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

அவகோடா சத்தானதும் சுவையானதுமாகும். ஆகவே அவகோடா டிப் மிக மிக சுவையானதாகும் .அவகோடா இரத்தத்தில் L.D.L கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்க உதவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் உள் இருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.