அரேபியா பிரெட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் - ஒரு பாக்கெட்
சிக்கன் - 150 கிராம்( எலும்பில்லாதது)
மயானிஸ் - ஒரு பெரிய கரண்டி
துருவிய முட்டை கோஸ் - ஒரு கப்
துருவிய கேரட் - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - ஒரு டேபுள் ஸ்பூன்
செலரி லீஃப் - அரை கப் (பொடியாக நறுக்கவும்)
வெள்ளை மிளகு தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - ஐந்து டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை பழம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கழுவி கொள்ளவும்.
அதில் உப்பு, சோயா சாஸ், வெள்ளை மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அனைத்தையும் வேகவிடவும்.
வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு நல்ல உதிர்த்து கொள்ளவும் (அ) பிளென்டரில் ஒரு சுற்று சுற்றி அதிலேயே முட்டை கோஸ், கேரட், குடைமிளகாய், செலரி லீஃப் அனைத்தையும் போட்டு கடைசியில் மையானிஸ் போட்டு ஒரு அடி அடித்து விடவேண்டும்.
இப்போது எல்லா கலவையும் ஒன்றாக சேர்ந்து விடும்.
பிரெட்டில் ஒரங்களை நறுக்கி விட்டு பிரெட்டை முக்கோண வடிவில் கட் செய்து இரண்டு பிரெட்டுக்கு நடுவில் இந்த கலவையை வைத்து டொமேட்டோ சாஸ் கொஞ்சம் ஸ்பெரெட் பண்ணி மூடவும்.
குறிப்புகள்:
அருமையான காலை சிற்றுண்டி, மாலையிலும் சாப்பிடலாம். பிள்ளைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். ஆபீஸ்க்கும் எடுத்து செல்லலாம்.
நிறைய செய்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்து உபயோகப்படுத்தலாம். திடீர் விருந்தாளிகளா கவலை இல்லை.