அரேபியன் மீட் பால்ஸ்
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி - அரை கிலோ
முட்டை - 1
பால் - கால் கப்
ஓட்ஸ் - கால் கப்
ப்ரெட் க்ரெம்ப்ஸ் - கால் கப்
வெங்காயம் - 1
காய்ந்த பார்சிலி இலை- 1 டேபிள் ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
அல்லது கொத்தமல்லி இலை.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)
மிளகுத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மில்லி
செய்முறை:
கொத்துக்கறியை அலசி வடிகட்டிக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக வடித்து விடவும்.
முட்டையை பீட் பண்ணி வைக்கவும், வெங்காயத்தை சாப் செய்து வைக்கவும்.
ஒரு பவுளில் முட்டை, பால், ஓட்ஸ், ப்ரெட் க்ரெம்ப்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து கொத்துக்கறி, உப்பு, பெப்பர் பார்சிலி அல்லது கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு சேர்க்கவும். நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும். 24 உருண்டைகளாக பிடிக்கவும்.
பானில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.அல்லது அவனிலும் 10- 15 நிமிடம் வைத்து எடுத்து நீர், எண்ணெய் வடித்து விட்டு திரும்ப 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான அரேபியன் மீட் பால்ஸ் ரெடி.
குறிப்புகள்:
இது பார்ட்டி சமயம் செய்து அசத்தலாம். தக்காளி கெட்சப், பூண்டு சாஸ், பார்பிக்யூ சாஸ் உடன் பரிமாறலாம்.