அரேபியன் சுவீட் பக்லவா(Baklava)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரெடிமெட் பேஸ்ட்ரி ஷீட்ஸ்/phyllo pastry - ஒரு பாக்கெட்

பூரணம் செய்வதற்கு:

நறுக்கிய பேரிச்சம் பழம் - அரைக்கோப்பை

நறுக்கிய பாதாம் பருப்பு - அரைக்கோப்பை

நறுக்கிய பிஸ்டாச்சியோ பருப்பு - ஒரு கோப்பை

நறுக்கிய அக்ரூட் - அரைக்கோப்பை

சர்க்கரை - அரைக் கோப்பை

தேன் - இரண்டு மேசைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - இரண்டு தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

பட்டை - ஒரு சிட்டிகை

வெண்ணெய் - ஒரு கோப்பை

சிரப் தயாரிக்க:

சர்க்கரை - ஒரு கோப்பை

தேன் - ஒரு கோப்பை

தண்ணீர் - ஒரு கோப்பை

எலுமிச்சைபழச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் பேஸ்ட்ரியை ஃபிரீசரிலிருந்து எடுத்து இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

ஒரு கோப்பையில் வெண்ணெயைத் தவிர்த்து, பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேர்த்து கலக்கி வைக்கவும்.

அவனை 350 டிகிரி F ல் வைத்து சூடாக்கவும்.

வெண்ணெயை உருக்கி வைக்கவும்.

பேக்கிங் செய்யக் கூடிய பாத்திரத்தில் சிறிது உருக்கிய வெண்ணெயை பரவலாக பூசி வைக்கவும்.

பிறகு ஃபிரிட்ஜில் உள்ள பேஸ்ட்ரியில் பாதிய எடுத்து மீதியை ஃபிரிட்ஜில் வைத்து விடவும். பின்பு எடுத்த பாதியை ஒவ்வொரு இதழாக மெதுவாக பிய்தெடுத்து பேக்கிங் பாத்திரத்தில் வைத்து, உருக்கிய வெண்ணெயை ஒரு சிறிய பிரஷ்ஷால் தொட்டு ஒவ்வொரு இதழிலும் பூசவும்.

இவ்வாறே எல்லா இதழையும் பூசி அடுக்காக வைக்கவும்.

பிறகு தயாரித்துள்ள பூரணத்தை பரவலாக அதன் மீது போடவும். தொடர்ந்து பிரிட்ஜிலுள்ள பேஸ்ட்ரியை வெளியில் எடுத்து முதலில் செய்தது போலவே பூரணத்தின் மீது ஒவ்வொரு இதழிலும் வெண்ணெயை பூசி அடுக்காக அடுக்கி மேல் பகுதியிலும் பரவலாக வெண்ணெயைப் பூசவும்.

பிறகு பர்பி வெட்டுவதைப் போல் கூர்மையான கத்தியால் வேண்டிய வடிவத்தில் கீறிவிட்டு சூடாக்கிய அவனில் வைக்கவும்.

இதற்கிடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் சர்க்கரை சிரப் செய்வதற்கான பொருட்களை கலக்கி அடுப்பில்வைத்து கொதிக்க விட்டு கெட்டியான சிரப்பாக்கி வைக்கவும்.

அவனில்லுள்ள பக்லவா நன்கு சிவக்க வெந்தவுடன் வெளியில் எடுத்து கத்தியை கொண்டு கீறிய வடிவத்தை நன்கு ஆழமாக வெட்டி தயாரித்த சிரப்பை பரவலாக ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவிடவும்.

நன்கு சிரபில் ஊறிய பின்பு இந்த சுவையான பக்லாவா என்ற இனிப்பை எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: