அம்ரிட்சாரி குல்சா
தேவையான பொருட்கள்:
அம்ரித்சாரி குல்சா செய்ய : மைதா - 3 கப் பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - அரை கப் தயிர் - அரை கப் உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மாவுடன் உப்பு
சர்க்கரை
பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்த்து கலக்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
பிறகு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு அதிகம் கொழகொழப்பாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்க கூடாது. அது தான் பதம். ஈர துணி போட்டு மூடி வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மாவை எடுத்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து மொத்தமாக மாவு தேய்த்து தேய்க்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் பேனில் போட்டு மூடி வைத்து வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுக்கவும். கடைசியாக அப்படியே நெருப்பில் போட்டு எடுக்கவும். சுவையான அம்ரிட்சாரி குல்சா தயார்.