அம்பறெல்லா தோஸி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அம்பறெல்லா காய் - 10

சீனி (சர்க்கரை) - 2 கப்

ஏலக்காய்த் தூள் - (3-5)

தண்ணீர் - (1 -2) கப் (சீனிப்பாகு காய்ச்சக் கூடியளவு)

செய்முறை:

அம்பறெல்லா காயின் தோலை அகற்றவும். அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும் (தட்டையாக்கவும்).

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீனியை கரைக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக பாகு காய்ச்சவும் .

பாகில் தட்டையான (சப்பையான) அம்பறெல்லா காயை போட்டு நன்றாக பிரட்டவும் (அம்பறேல்லாகாயில் சீனிப்பாகு ஒட்டக்கூடியதாக சேர்த்து பிரட்டவும் (கலக்கவும்)).

அம்பறெல்லா காயை நன்றாக காயவிடவும் (ஒரளவு காய்ந்ததும் திருப்பி மறு பக்கம் போட்டு காய விடவும் (குலுக்கி குலுக்கி) இது நன்றாக காய்ந்ததும் எடுத்து சாப்பிடவும்.

இதோ சுவையான அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .

குறிப்புகள்:

இதை இஸ்லாமிய சகோதரிகள் தங்களுடைய நோன்பு காலங்களில் சாப்பிடுவதற்காக நோன்பு ஆரம்பமாவதற்கு ஒருகிழமைக்கு முன்பு செய்து சாடி(போத்தலில்)போட்டு வைப்பார்கள். இது ஒரு மாதம்வரை பழுதடையாமல் இருக்கும் இது சுவையான ஒரு இனிப்பு வகையாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1)அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும். (2)நன்றாக சீனியை பாகு காய்ச்சவும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் அம்பறெல்லா தோஸியை சாப்பிடவேண்டாம். சாப்பிட விரும்பினால் வைத்தியரின் ஆலோசனையை பெறவும். மாற்று முறை - சீனிக்கு(சர்க்கரை) பதிலாக தேனை பயன்படுத்தலாம். ஆனால் சீனிப்பாகுவே சுவையானது தேன் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.