அமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு இறைச்சி - கால் கிலோ

முட்டை - ஒன்று

வெங்காயம் - ஒன்று

நறுக்கிய செலரி - கால் கோப்பை

ரொட்டித்துண்டு - ஆறு

மயோனைஸ் - ஒரு மேசைக்கரண்டி

பார்ஸ்லி தழை - ஒரு மேசைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி

டீஜான் மஸ்டர்ட் - அரை தேக்கரண்டி

உப்புத்தூள் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

ஹாட் பெப்பர் சாஸ் - அரைதேக்கரண்டி

செய்முறை:

ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மயோனைஸைப் போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு டீஜான் மஸ்டர்ட், எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பு, மிளகு, பெப்பர் சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து வெங்காயம், செலரி, பார்ஸ்லி ஆகியவற்றைப் போட்டு சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிறகு ரொட்டித்துண்டுகளில் முதலில் இரண்டு துண்டுகளைப் போட்டு மிக்ஸியில் தூளாக்கி தயாரித்துள்ள கலவையில் போட்டு அதனுடன் நண்டை போட்டு இலேசாக கலக்கி சிறிய உருண்டைகளாகச் செய்து இலேசாக வட்டமாக தட்டி வைக்கவ்ம்.

பிறகு மீதியுள்ள ரொட்டிகளை தூளாக்கி தட்டியுள்ள கேக்குகளை அதில் போட்டு பிரட்டி வைக்கவும்.

இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்துக் கொண்டு நாண்ஸ்டிக் சட்டியை அடுப்பில் காயவைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயையும், இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயையும் கலந்து சிறிது ஊற்றி, நண்டு கேக்குகளை சட்டியின் அளவிற்கு ஏற்றவாறு போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

இந்த சுவையான கிராப் கேக்குகளை தக்காளி கெட்சப்புடன் அல்லது பிடித்தமான சாஸுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

விருந்துக்களின் போது ஒரு வாரத்திற்கு முன்பே தயாரித்து ஃபிரீசரில் வைத்து விடவும். பிறகு தேவைப்படும் பொழுது டீஃபுரோஸ்ட் செய்து ரொட்டித்தூளில் பிரட்டி சுடலாம். நல்ல வரவேற்பை பெறும் அபிடைஸர் இது.