அகத்திக்கீரை சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 2

பால் - 1 கப்

உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அகத்திக்கீரையை தண்ணீரில் கழுவி, இலையை காம்பில் இருந்து உருவி வைக்கவும்.

வெங்காயம், மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

வெங்காயம் பாதியளவு வெந்ததும் அகத்திக்கீரையைச் சேர்க்கவும்.

5 நிமிடத்தின் பின்பு பாலைச் சேர்க்கவும்.

பால் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்:

அகத்திக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டீன், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கக் கூடிய தன்மை உண்டு.

இந்தச் சொதி சோறு, புட்டு, இடியப்பத்துடன் சாப்பிடலாம்.