ஃப்ரைட் ஐஸ்க்ரீம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெனிலா ஐஸ்க்ரீம் - தேவையான அளவு ப்ளையின் ஸ்பாஞ்ச் கேக் - 4 துண்டுகள் முட்டை - ஒன்று எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப்பினால் அல்லது சிறிய குழி கரண்டியினால் பந்து போன்று உருட்டி பட்டர் பேப்பர் விரித்த ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரீஸரில் 3 மணி நேரங்கள் வைத்திருக்கவும். (இவ்வாறு வைத்திருப்பதால் ஐஸ்க்ரீம் பந்துகள் நன்கு கெட்டியாகும்).

கேக் துண்டுகளை உதிர்த்து வைக்கவும்.

முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

3 மணி நேரங்கள் கழித்து ஃப்ரீஸரிலிருந்து ஐஸ்க்ரீம் பந்துகளை எடுத்து

அடித்து வைத்துள்ள முட்டையில் பிரட்டவும்.

பிறகு அதனை உதிர்த்து வைத்துள்ள கேக் க்ரெம்ஸில் பிரட்டவும்.

பிரட்டிய உருண்டைகளை கைகளால் நன்கு உருட்டவும்.

உருட்டிய உருண்டைகளை கால் மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும்.

கால் மணி நேரம் கழித்து உருண்டைகளை வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை முட்டை கலவையில் பிரட்டியெடுத்து

கேக் க்ரெம்ஸில் பிரட்டி மேலும் கால் மணி நேரங்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கவும்.

பிறகு உருண்டைகளை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து சூடான எண்ணெயில் கவனமாக போடவும்.

பழுப்பு நிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

ஐந்து நட்சத்திர உணவகங்களில் பரிமாறப்படும் "சூடான" ஃப்ரைட் ஐஸ்க்ரீம் எளிமையான முறையில் வீட்டிலேயே தயார்.

குறிப்புகள்: