ஃபைளோ அஸ்பாரகஸ்( Phyllo Asparagus)
தேவையான பொருட்கள்:
ப்ரோசன் ஃபைளோ (frozen Phyllo dough) - ஒரு பாக்கெட் அஸ்பாரகஸ் – 10 பட்டர் – கால் கப் பார்மஜான் சீஸ் – கால் கப் உப்பு – ஒரு தேக்கரண்டி மிளகு தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை:
பட்டரை உருக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவனை 375 Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். அஸ்பாரகஸின் அடித்தண்டு பகுதியை நறுக்கி விடவும். பின்னர் அஸ்பாரகஸுடன் உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
அதன் பிறகு ஃபைளோ சீட் ஒன்றை எடுத்து அதில் உருக்கி வைத்திருக்கும் பட்டரை ப்ரஷ்ஷை வைத்து தடவி விடவும். அதன் மேல் சீஸை தூவி விடவும். ஃபைளோ சீட் என்பது பார்க்க பப்ஸ் சீட் போலவே இருக்கும். ஆனால் இது மிகவும் மெல்லியதாகவும்
ஒரு பாக்கெட்டில் குறைந்தது 25 சீட்டுகள் இருக்கும்.
பின்னர் பட்டர் தடவி வைத்துள்ள சீட்டில் ஒரு அஸ்பாரகஸை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.
இதைப் போலவே எல்லா அஸ்பாரகஸிலும் செய்து அதை அவன் ட்ரெயில் அடுக்கி வைக்கவும். இறுதியாக ட்ரெயில் அடுக்கி வைத்திருக்கும் அனைத்து ஃபைளோ அஸ்பாரகஸின் மீதும் பட்டரை தடவி பார்மஜன் சீஸை தூவி விடவும்.
அதன் பின் முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் இந்த ட்ரையை வைத்து 375 Fல் 15 - 18 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
18 நிமிடங்களுக்கு பிறகு ஃபைளோவின் நிறம் மாறி பேக் ஆனதும் வெளியில் எடுத்து விடவும்.
சுவையான ஃபைளோ அஸ்பாரகஸ் ரெடி. இதனை தக்காளி சஸுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான
மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.