ஃபீஜோவா பை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டாப்பிங் (topping) செய்வதற்கு: மா - 3/4 கப் சீனி - அரை கப் மார்ஜரின் - 100 கிராம் உலர்த்திய தேங்காய்த் துருவல் (decicated coconut) - கால் கப் ஷெல் (shell) செய்வதற்கு: மா - 2 கப் பேக்கிங் பௌடர் - ஒரு தேக்கரண்டி மார்ஜரின் - 125 கிராம் சீனி - கால் கப் முட்டை - ஒன்று பால் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி ஃபீஜோவா பழங்கள் - 2 1/2 கப் (சதைப் பகுதி மட்டும்)

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். அவனை 180°c வெப்ப நிலையில் முற்சூடுப்படுத்தவும்.

டாப்பிங் செய்வதற்குக் கொடுத்துள்ள அளவு மா

சீனி

தேங்காய்த் துருவல் மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் மார்ஜரின் சேர்த்துப் பிசறி வைக்கவும்.

ஷெல் செய்வதற்கு 2 கோப்பை மா

பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து சலித்து எடுக்கவும். அத்துடன் 125 கிராம் மார்ஜரின் சேர்த்து விரலால் நன்கு பிசறவும்.

இதனோடு ஒரு முட்டை

கால் கோப்பை சீனி சேர்த்து நன்கு பிசையவும்.

தேவைக்கு பால் சேர்த்து சற்றுத் தளர்வாகப் பிசைந்து கொள்ளவும். (பால் முழுவதும் தேவைப்படாது.)

20 செ.மீ அளவு வட்டமான கேக் ட்ரேயை ஸ்ப்ரே செய்து அதில் பிசைந்து வைத்துள்ள மாவினை படத்தில் காட்டி இருப்பது போல் கையால் சமனாகப் பரவி விடவும்.

ஃபீஜோவா பழங்களை இரண்டாக வெட்டி சிறிய கரண்டி ஒன்றினால் சதைப் பகுதியைச் சுரண்டி எடுக்கவும்.

பை ஷெல்லின் உள்ளே பரவலாகப் போடவும்.

இரண்டாவது மாக்கலவையை பழம் முழுவதாக மறையுமாறு பரவலாகப் பிசறியது போல் போடவும்.

25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

சூடாகப் பரிமாறவும். விரும்பினால் க்ரீம் அல்லது ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்புகள்: