ஃபிஷ் ஹெட் கறி
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் மீன் தலை - ஒன்று (ஸ்னாப்பர் மீன் தலை பயன்படுத்தியுள்ளேன்) வெண்டைக்காய் - 2 கத்திரிக்காய் - ஒன்று (சிறியது) பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பூண்டு - 6 பல் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் - 3 மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி (காரத்திக்கேற்ப) மல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி வறுத்து பொடித்த சீரகப் பொடி- ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகப் பொடி (சோம்புத் தூள்) - ஒரு தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வானலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு
அதில் நீளமாக நறுக்கிய வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடாக்கி கடுகு
கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு
இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
புளிக்கரைசல்
தேவையான அளவு தண்ணீர்
உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் தலையைச் சேர்த்து வேக விடவும். (பெரிய தலையாக இருந்தால் நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்).
மீன் முக்கால் பாகம் வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் கத்திரிக்காயைச் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கால் தேக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து தூவி இறக்கவும்.
சுவையான ஃபிஷ் ஹெட் கறி தயார்.