ஃபிரெஞ் ஃபிரைஸ் (2)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 பெரியது
ஒலிவ் எண்ணெய் - 1/4 கப்
மிளகாய்த்தூள்/மிளகுதூள் - 1 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
அவனை 450 Fஇல் முற்சூடு பண்ணவும்.
உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமாக வெட்டி சுத்தப்படுத்தவும்.
பின்னர் குளிர்ந்ததண்ணீரில் போட்டு ~1 மணித்தியாலம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
பின்னர் எடுத்து ஈரம் ஒற்றி உப்பு சேர்த்த ஒலிவ் எண்ணெயில் தோய்த்து எடுத்து ஒரு நான் ஸ்டிக் பேக்கிங் பானில் அல்லது எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் அடுக்கவும்.
அவனில் வைத்து 15- 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பின்னர் வெளியே எடுத்து மறு பக்கம் திருப்பி போட்டு பேக் செய்யவும்.
இவ்வாறு கிழங்கு மொரு மொருப்பகும் வரை திருப்பி போட்டு பேக் செய்யவும்.
கிழங்கு மொரு மொருப்பானதும் வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும்.
சுவையான ஃபிரெஞ் ஃபிரைஸ் தயார். உடனேயே சாப்பிடவும். நேரம் சென்றால் இளகிவிடும்.
குறிப்புகள்:
இதற்கு பேக் செய்ய பயன்படும் Russet Potatoes பாவிக்கவும். இதற்கு எண்ணெய் அதிகம் தேவைப்படாது.