ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 4

மைதா - 250 கிராம்

சீனி - 100 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையானது

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சீனியை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும், ஆப்பிளை தோல் நீக்கி விரல் கன அளவிற்கு ரவுண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.

இப்பொழுது நடுவில் ஓட்டையுடன் காணப்படும், பின்பு மைதாவை சோடா உப்புடன் நன்கு சலித்து உப்பு சேர்த்து பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய ஆப்பிளை மாவில் முக்கி எண்ணெயில் விட்டு ஒரு புறம் வந்த பின்பு மறுபுறம் திருப்பி போடவும்.

மிதமான தீயில் பொரித்து எண்ணெயை வடிகட்டி ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். பொரித்த பஜ்ஜியின் மேல் அரைத்த சீனியை பரவினாற் போல் தூவவும், அனைத்து ஆப்பிளையும் இதே போல் செய்யவும்.

இதுவே ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: