ஸ்பெஷல் மில்க்
0
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
பாதாம், முந்திரிப்பருப்பு - தலா பத்து
பச்சரிசி - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
சீனி - தேவைக்கு
நெய் - 2 டீஸ்பூன்
பாதாம் எசன்ஸ், சாஃப்ரான் - சிறிது
செய்முறை:
முதலில் பாலை காய்ச்சி எடுக்கவும். முந்திரி, பாதாம், பச்சரிசி ஊறவைத்து மையாக அரைத்து எடுக்கவும்.
அரைத்தவற்றை பாலில் கலந்து அடிப்பிடிக்காமல் காய்ச்சவும், ஏலம் தட்டி போடவும், சீனி சேர்க்கவும். நெய் சேர்க்கவும். திக்காக இருந்தால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளவும்.
விரும்பினால் ஒரிரு ட்ராப் பாதாம் எசன்ஸ், ஒரு பின்ச் சாஃப்ரான் சேர்க்கவும்.
சுவையான ஸ்பெஷல் மில்க் ரெடி. இதனை ஜில்லென்றும் சூடாகவும் பரிமாறலாம்.