ஸ்டஃப்ட் முட்டை சப்பாத்தி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
முட்டை - ஒன்று
மிளகு, சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, சிறிது எண்ணெய் போட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
முட்டையில் உப்பு, மிளகு சீரகத்தூள் போட்டு அடித்துக் கொள்ளவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்து சப்பாத்தி பலகையில் வைத்து பெரிய சப்பாத்தியாக பரத்தவும்
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பரத்திய சப்பாத்தியை போட்டு அடித்து வைத்த முட்டையை ஊற்றி எல்லா பக்கமும் படும்படி ஒரு கரண்டியால் தேய்த்து விடவும்.
பின் சப்பாத்தியை படத்தில் உள்ளது போல் நான்கு பக்கமும் மடிக்கவும்.
மிதமான தீயில் இரு பக்கமும் எண்ணெய் விட்டு வேக விடவும். நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் (இப்படி கீறினால் உள்ளே இருக்கும் முட்டை வேகும்)
இப்போது ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி