வெள்ளை கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 150கிராம்

சிறுபருப்பு- 50கிராம்

பெரிய பூண்டு- 1

சீரகம்- 1/4ஸ்பூன்

வெந்தயம்- 1/4ஸ்பூன்

தேங்காய்பால்- 3டம்ளர்

முருங்கை கீரை- 2ஸ்பூன்

தாளிக்க:

நெய்- 3ஸ்பூன்

சின்ன வெங்காயம்- 3

இஞ்சிபூண்டு விழுது- 1ஸ்பூன்

பட்டை, கிராம்பு- தலா 1

ஏலக்காய்- 2

ரம்பயிலை- கொஞ்ம்

செய்முறை:

குக்கரில் பச்சரிசி, சிறுபருப்பு, உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் போட்டு வேக வைத்து ஆறிய பிறகு 1சுற்று மிக்ஸீயில் அடித்து எடுக்கவும்.

ஒரு சட்டியில் அரைத்த கஞ்சியினை போட்டு தேங்காய்பாலை ஊற்றவும்.

ரொம்ப திக்காக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.

உப்பு, முருங்கை கீரை போட்டு சூடு பண்ணவும். கொதி வரும் போது தாளிக்க கூடிய பொருட்களை போட்டு கலக்கவும்.

5 நிமிடம் கழித்து இறக்கவும்.

வாயு தொல்லை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்தால் தொல்லை நீங்கும்

குறிப்புகள்: