வெண்டைக்காய் பச்சடி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 10

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

புளி - 1நெல்லிக்காய் அளவு

மல்லி தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்

கரம்மசாலா - 1 ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது -1/2 ஸ்பூன்

தேங்காய் விழுது - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

எண்ணெய் - சிறிது

சீனி - 2ஸ்பூன்

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி பின் துடைத்து தலை மற்றும் வால் பகுதியை அரிந்துவிடவும்.

அரிந்த தலைப்பகுதியிலிருந்து நடுப்பகுதி வரை கீரி விடவும்.

இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து அரைகோப்பை அளவு சாறெடுக்கவும்.

புளிக் கரைசலில்மல்லி,மஞ்சள்,கரம்மசாலா,இஞ்சி,பூண்டு,தேங்காய்,மிளகாய் தூள் மற்றும் உப்பு அனைத்தையும் போட்டு வைக்கவும்.

ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போடவும்.

அதில் வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் புளிக் கரைசலை அதில் ஊற்றவும்.

அதனுள் பொரித்த வெண்டைக்காயை போட்டு மூடி வேக விடவும்.

கலவை வற்றியதும் இறுதியில் சீனியை போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

எல்லா மசாலாவும் சேர்ந்து பிரண்டு எண்ணெயை வெளியிடும் போது அடுப்பை அணைக்கவும்.

இதை பிரியாணி மற்றும் நெய் சாதத்துடன் பறிமாறவும்.

குறிப்புகள்: