வாழைப்பூ கூட்டு
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
இறால் - பத்து
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவியது - ஒரு மூடி
பெருஞ்சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - இரண்டு கரண்டி
செய்முறை:
வாழைப்பூவை நடுவில் உள்ள காம்பை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
சுத்தம் செய்த இறாலை இரண்டாக வெட்டி வைக்கவும்.
வாழைப்பூவில் கொஞ்சம் வெங்காயம், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, இறால் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதி வெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகத்தூள் போட்டு தாளித்து வேகவைத்த வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் கிளறவும்.
பின் துருவிய தேங்காய்ப்பூவை போட்டு கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.