ரைஸ் மிட்டா
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 100 கிராம்
மில்க் மெயிட் டின் - 1
பால் - 250 மில்லி
சாப்ரான் - 1 பின்ச்.
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பிஸ்தா - கொஞ்சம்
லெமன் யெல்லொ - 2 பின்ச்
உப்பு - 1 பின்ச்.
செய்முறை:
100 கிராம் பச்சரிசியை 750 மில்லி தண்ணீர் விட்டு, பின்ச் உப்பு போட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும்.
வெந்தவுடன் மில்க் மெயிட், பால், கலர், பின்ச் சாப்ரான் கலந்து வைக்கவும். (இனிப்புச்சுவைக்கு தகுந்தபடி மில்க் மெய்ட் சேர்த்துக்கொள்ளவும்.)
நெய்யில் முந்திரி, திராட்சை, பிஸ்தா வறுத்து போட்டு அலங்கரிக்கவும்.
சுவையான ரைஸ் மிட்டா ரெடி.