ரிச் பராசப்பம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி உடைந்த பாஸ்மதி - அரை படி
தேங்காய்பால் டின் - 400 மி.லி
முட்டை - 4
நாட்டு வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோறு - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை:
முதல் நாளே மாவு தயாரிக்க வேண்டும். அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிகட்டவும். அதில் சோறுரை பிசறி வைக்கவும் மிக்ஸியில் வெங்காயத்தை உரித்து போட்டு அதில் பெருஞ்சீரகத்தை போட்டு மையாக அரைக்கவும்.
மேலும் கிரைண்டரில் மாவு கலவை, அரைத்த வெங்காயம் தேங்காய்பால் விட்டு நன்றாக நைசாக அரைக்கவும்.
இந்த மாவு இட்லி மாவைவிட சற்று கெட்டியாக இருக்கும் அதில் உப்பு சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்
மறுநாள் முட்டையை நன்றாக கலக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும். பிறகு ஆப்ப சட்டியில் ஒரு குழிக்கரண்டி மாவைவிட்டு அடைபோல் ஊற்றவும்.
இந்த ஆப்பம் மெல்லிதாக இருக்க கூடாது. மேலே ஒரு மூடியை வைத்து மூடவும். பாதி வெந்து இருக்கும் நிலையில் ஒரு கரண்டி நெய் சுற்றினால் போல்விட்டு திருப்பி போடவும். வெந்த பின்பு எடுக்கவும்.
இதற்கு கோழிக்குழம்பு, குருமா தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.