மைதா ஆப்பம் (கோழி ஆப்பம்)
0
தேவையான பொருட்கள்:
மைதா- 3 கப்
முட்டை - 1
தேங்காய் பால் - 1 கப்(கெட்டியானது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மைதா மாவில் முட்டை, தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு கரைத்து தண்ணீர் தேவைகேற்ப்ப ஊற்றி நன்கு கரைத்துக்கொள்ளவும்.
மாவு ரெம்பவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது தண்ணீராகவும் இருக்காமல் ஆப்பமாவு பதத்திற்க்கு கரைத்துகொள்ளவும்.
கட்டிகள் இருந்தால் மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் நான் ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து சூடானதும் இரண்டு குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி பேன் முழுவதும் பரவும் படி செய்து தீயை குறைத்து வைத்து வேகவிடவும். வெந்ததும் தன்னாலயே கழன்று வரும் போது எடுத்து விடவும்.
இதை திருப்பி போடக்கூடாது.